அமெரிக்க கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களை கேட்டறிய இந்தியா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறை தீவிரமாக கண்காணித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியது.
உலகம் முழுவதும் இணையதளம் மூலம் பரிமாற்றப்பட்டு வரும் தகவல்களை கண்காணிக்க அமெரிக்கா ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என இந்தியா ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இணையதளம் மூலம் பெறப்படும் தகவல்களை பரிமாறிக் கொள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா கண்காணிப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை உரிய அமைப்பின் மூலம் கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளோம்.
இந்நடவடிக்கையால் இந்திய தனிநபர் உரிமை தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா எனக் கேட்டபோது அவர் கூறியதாவது:
தனிநபர் உரிமைகள் மீறப்படுவதை இந்தியா ஏற்காது. ஒவ்வொரு நாளும் புது புது பிரச்னைகள் எழுகின்றன. தற்போதே இதுதொடர்பாக எந்த முடிவுக்கும் வரமுடியாது. உரிய விவரங்கள் கிடைத்தபின் தான் தேவையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார் அக்பருதீன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

