பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்து நதி ஆணையக் குழுவினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து 3 நாள் ஆய்வு மேற்கொண்டனர்.
பாகிஸ்தான் சிந்து நதி ஆணையர் ஆசிப் பெய்க் தலைமையிலான குழுவினர் உலர் தடுப்பணை, கிஷன் கங்கா புனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட திட்டப் பணிகளை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜீலம் நதி நீரின் அளவை ஆய்வு செய்த பின் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றனர்.
இதன்தொடர்ச்சியாக இந்திய சிந்துநதி ஆணையக் குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
சுதந்திரத்துக்கு பின் சிந்து நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் இரு நாடுகளிடையே தகராறு ஏற்பட்டது. உலக வங்கியின் தலையீட்டின் பேரில் கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி மொத்தம் உள்ள 6 நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியாவும், மேற்கு நோக்கி பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதி நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிந்து நதி நீரை பங்கீடு செய்வது தொடர்பாக நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் முறையிட்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

