சத்தீஸ்கர் மாநிலம் கரியாபேண்ட் பகுதியில் நக்சல்களுடன் சனிக்கிழமை நிகழ்ந்த மோதலில் சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து காவல் துறை உயர் அதிகாரி கூறியதாவது: சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நக்சல் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, கரியாபேண்ட் அருகே உள்ள கல்லாரி கிராம வனப் பகுதியில் சிஆர்பிஎப் 211ஆவது படைப்பிரிவினர் சனிக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பிற்பகல் 3 மணி அளவில், சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஆயுதம் ஏந்திய நக்சல்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பதிலுக்கு வீரர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தியதில் நக்சல்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த மோதலில் இந்தப் படைக்கு தலைமை தாங்கிய துணைத் தளபதி எஸ்.கே. தாஸ் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். உயிரிழந்த அந்த அதிகாரியின் உடலை மீட்பதற்காக கூடுதல் படையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
கடந்த மே 25ஆம் தேதி, பஸ்தார் வனப் பகுதியில் யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸôர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

