சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டம்

இமாசலப் பிரதேசம் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியாவின் பெருமளவிலான நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே, சீன விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.

Updated On :2 ஜூன் 2013, 5:45 am

இமாசலப் பிரதேசம் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்தியாவின் பெருமளவிலான நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. எனவே, சீன விஷயத்தில் மத்திய அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறியுள்ளார்.

தில்லயில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முலாயம் சிங் பேசியதாவது:÷""இந்தியப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன்.

அதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. என்ன விலை கொடுத்தாவது இந்தியாவின் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சீனா விரும்புகிறது. லடாக்கிலிருந்து இப்போதைக்கு சீனப்படைகள் வெளியேறி இருக்கலாம். ஆனால், இதுபோன்ற ஆக்கிரமிப்பு முயற்சிகளை சீனா மீண்டும் மேற்கொள்ளும் என்பதை மறந்துவிடக் கூடாது. சீனா தொடர்பான தவறான எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும்.

இமாசலப் பிரதேசம் முதல் வடக்கு கிழக்கு மாநிலங்கள் வரை பெரும்பகுதி நிலங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா திட்ட

மிட்டுள்ளது.

சீனாவின் வரைபடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான 7 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அருணாசலப் பிரதேச மாநிலம் தனக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அப்பகுதியினர் சீனாவுக்கு வருவதற்கு விசா பெறத் தேவையில்லையென்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை விட சீனாதான் நமது மிகப்பெரிய எதிரி. எனவே, சீனாவுக்கு எதிராக கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும்'' என்றார் முலாயம் சிங்.

கடந்த ஏப்ரல் மாதம் லடாக் பகுதியில் 19 கி.மீ. தூரம் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் முகாம் அமைத்தனர்.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே பேச்சு நடத்தி சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சீன ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. அப்போது முலாயம் சிங், ""மத்திய அரசு பலவீனமாக உள்ளது.

பேச்சு நடத்திக் கொண்டிருக்காமல், ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.