""மக்கள் மத்தியில் ஆன்மிக எழுச்சியைத் தட்டி எழுப்பிய பெருமை வேளுக்குடி கிருஷ்ணனையே சாரும்'' என்று தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் புகழாரம் சூட்டினார்.
தில்லி முத்தமிழ்ப் பேரவையும், தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் பக்தி மற்றும் இசை விழா புது தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக வேளுக்குடி கிருஷ்ணனின் "ஸ்ரீ பகவத் கீதாசாரம்' எனும் பகவத் கீதை ஆன்மிகச் சொற்பொழிவு 3 நாள்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய உரை:
தமிழகத்தின் தலைசிறந்த ஆன்மிக புரவலர்களாக இருந்த சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர், மஞ்சக்குடி ராஜகோபல சாஸ்திரி, பாலகிருஷ்ண சாஸ்திரிகள், எம்பார் விஜயராகவாச்சாரியார், சிவானந்த விஜயலட்சுமி, புலவர் கீரன், வாரியார் சுவாமிகள் போன்றோர்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மிகப் பெரிய ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினர். நாத்திகவாதம் ஒருபுறம் மிகப் பெரிய அளவில் தலைதூக்கியபோது மக்கள் ஆன்மிக நாட்டத்திலிருந்து விடுபட்டுப் போய்விடாமல் அவர்கள் காத்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மிகம் தொய்வு அடைந்த நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தமிழகத்தை மீட்டு ஆன்மிக எழுச்சியை மக்களிடம் தட்டி எழுப்பிய பெருமை வேளுக்குடி கிருஷ்ணனையே சாரும்.
ஆன்மிக உரைகளை தொலைக்காட்சியிலும் குறுந்தகடு மூலமும் கேட்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிற்றுண்டி அருந்திக் கொண்டே தொலைக்காட்சியில் ஆன்மிக உரைகளைக் கேட்கும்போது அதில் முழுக் கவனமும் இருக்காது. வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற ஆன்மிகத்தில் ஊறிய மகான்களின் உரைகளை நேரடியாகக் கேட்கும்போதுதான் அதன் உண்மையான பலன் கிடைக்கும். இதுபோன்ற மகான்களைக் காண்பதும் அவர்களின் ஒலி அலைகளை உள்வாங்கிக் கொள்வதும் நம்மில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
வேளுக்குடியை தில்லிக்கு அழைத்து வந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முத்தமிழ்ப் பேரவையைப் பாராட்டுகிறேன். அந்த ஆன்மிக பொக்கிஷத்துக்கு ஈடு ஏதும் கிடையாது. ஆன்மிகம், அது எந்த மதமாக இருந்தாலும், அதுதான் இந்தியாவின் உயிர் மூச்சு.
பாமரர்களுக்கும் ஆன்மிக நாட்டம் ஏற்படுத்தும் வேளுக்குடி கிருஷ்ணனின் பணி பல்லாண்டுகள் தொடர வேண்டும்'' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

