ஆந்திர அரசின் திட்டங்களை விமர்சனம் செய்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எல்.ரவீந்திர ரெட்டி சனிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
தில்லியிலிருந்து ஆந்திரத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த முதல்வர், ரவீந்திர ரெட்டியை நீக்க ஆளுநர் நரசிம்மனிடம் பரிந்துரைத்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சர் நீக்கத்தைத் தொடர்ந்து, மேலும் 2 அல்லது 3 அமைச்சர்கள் நீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது லண்டனில் உள்ள ரவீந்திர ரெட்டி, வரும் 4-ம் தேதி ஆந்திரம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடப்பா மாவட்டத்திலிருந்து எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்ட ரவீந்திர ரெட்டி, 2010-ம் ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

