சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம்: அண்ணா ஹசாரே பிரதமருக்கு கடிதம்

ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி வரும் அக்டோபர் மாதம் தில்லியில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

Updated On :2 ஜூன் 2013, 4:43 am

ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி வரும் அக்டோபர் மாதம் தில்லியில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு அரசு உறுதிமொழி அளித்தபடி ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவில்லை. ஊழலால் நாட்டில் விலைவாசி பெருகி வருகிறது. இதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் தில்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன். ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் ஜனலோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என அரசு உறுதி கூறியதால் முன்பு உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.

பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அரசு ஆதரவு திரட்டி இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலின் போது அரசால் பெரும்பான்மையை பெற முடிந்தது.

ஆனால் ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசால் முடியவில்லை.

இது ஊழலை ஒழிக்க அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது. மக்கள் சாசனம், வலுவான லோக்பால் மசோதா, அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் விசாரணை வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

ஆனால் அரசு எதையுமே செய்யவில்லை என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.