புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு காகிதப் பைகளை செய்ய பயிற்சி தரப்படுகிறது. அவரது உழைப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஊதியம் தரப்படும்.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பின் போது ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் புணேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உயர்தரமான, கனமான 6 முதல் 8 கிலோ எடை கொண்ட காகிதப் பைகள் தயாரிப்பது தொடர்பாக சஞ்சய் தத்துக்கு பயிற்சி அளிக்கப்படும். தற்போது இவை தான் கடைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.
அவரது பணி, செயல்பாட்டைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.40 வரை ஊதியம் தரப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருக்குள்ள மிரட்டல்களை அடுத்து பலத்த பாதுகாப்புடன் கூடிய இடத்தில் பயிற்சி தரப்படும்.
சஞ்சய் தத் கடினமான பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

