சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வடமாநிலங்களில் அனல் காற்று: 3 பேர் சாவு

வடமாநிலங்களில் வீசி வரும் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Updated On :22 மே 2013, 7:59 am

வடமாநிலங்களில் வீசி வரும் கடும் அனல் காற்றால் பாதிக்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வட மாநிலங்களில் கடும் அனல்காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக மத்தியப்பிரதேசத்தில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர், பயிற்சிக் காவலர், ஒரு இளைஞர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஹரியாணா-பஞ்சாப்: பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களிலும் கடும் அனல் காற்று வீசுகிறது. இம்மாநிலங்களில் வெப்பநிலை 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. ஹரியாணா மாநிலத்தில் ஹிஸார், குர்கான், பிவானி, கர்னால், அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பக்காற்று வீசியது.

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், லூதியானா, பாட்டியாலா நகரங்களிலும் கோடை வெப்பம் கடுமையாக இருந்தது.

இதே நிலை மேலும் சில நாள்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.