மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்த ஆன்லைன் லாட்டரிக்கு அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது.
இத்தடையை அறிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
"ஆன்லைன் லோட்டோ' என்ற இந்தப் பரிசுச்சீட்டு விற்பனை, இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது. இது ஒரு சமூகப் பிரச்னையாகும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே கூட சண்டைகள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் குட்காவைத் தடை செய்தது போல், ஆன்லைன் லாட்டரிக்கும் தடை விதிக்கிறோம். விரைவில்
இதற்கான அரசு அறிவிக்கை வெளியிடப்படும்.
தொலைக்காட்சி சேனல்களில் ஆன்லைன் லாட்டரி குறித்த தகவல்களை ஒளிபரப்புவதைச் சிலர் தொடங்கியுள்ளனர். அந்த சேனல்களின் ஊழியர்கள் மீது எனக்குப் பரிவு உண்டு. ஆனால், சேனல்களை நடத்துவோருக்கு எதிராக நான் இருக்கிறேன். ஆன்லைன் லாட்டரியைத் தடை செய்யும் எனது முடிவை எதிர்த்து யாரும் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அது குறித்து நான் எதுவும் கூறப் போவதில்லை என்றார் மம்தா பானர்ஜி.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

