சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி: பாஜக

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  அரசு கடந்த 9 ஆண்டு காலங்களில் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என

Updated On :22 மே 2013, 8:30 am

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி  அரசு கடந்த 9 ஆண்டு காலங்களில் அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

2014-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆட்சி மன்றக் குழுவின் செயலாளர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டப் பணிகளிலும் அந்த அரசு அக்கறை காட்டவில்லை.

அனைத்துத் துறைகளிலும ஊழல் மலிந்துவிட்டது. விலைவாசி உயர்வால் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதான் இந்த அரசின் சாதனை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, புதன்கிழமையுடன் (மே 22) தனது 9 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசின் பலவீனங்களை மக்களிடையே கொண்டுசெல்வது மிகவும் அவசியம். ஊழல், லஞ்சம், திறமையற்ற தலைமை, மோசமான நிர்வாகம், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைப் புறக்கணிக்கும் போக்கு ஆகியவற்றால் அரசு அனைத்துத் துறைகளிலும் செயலிழந்துவிட்டதை மக்கள் உணர வேண்டும்.

சிறை நிரப்பும் போராட்டம்: அடுத்த வாரம் முதல் பாஜக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மே 27 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பாஜகவினர் சிறை நிரப்பும் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மோடி பங்கேற்பு: பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக கடந்த மார்ச் மாதம்  தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முதல் முறையாக இக் கூட்டத்தில் பங்கேற்றார்.