மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மா புதிய தலைமை கணக்குத் தணிக்கையாளராக (சி.ஏ.ஜி.) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்த வினோத் ராய் புதன்கிழமை ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க முறைகேடு உள்ளிட்டவை தொடர்பான தணிக்கை அறிக்கைகளால் சி.ஏ.ஜி. அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் பல முறை மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மாவை புதிய தலைமை கணக்குத் தணிக்கையாளராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதாகும் சசிகாந்த் சர்மா, பிகார் மாநிலத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
பிரிட்டனின் யார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் பட்டம்பெற்றுள்ளார். அவர் சிஏஜியாக 23ஆம் தேதி (வியாழக்கிழமை) பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். வினோத் ராயைப் போலவே சசிகாந்த் சர்மாவும் மத்திய நிதிச்சேவைத் துறையில் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் பாதுகாப்புத்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேஜரிவால் கட்சி எதிர்ப்பு: இதனிடையே, சசிகாந்த் சர்மாவை புதிய சி.ஏ.ஜி.யாக மத்திய அரசு நியமித்துள்ளதற்கு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ""சி.ஏ.ஜி. என்ற முறையில் அவர் 2003ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நடந்த கொள்முதல்கள் குறித்தும் தணிக்கை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் பிரிவில் அவர் அதிகாரியாகப் பணியாற்றியதால், சி.ஏ.ஜி. பணியை அவர் கவனிப்பது முரண்பாடாக இருக்கும்'' என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

