மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த பன்சால் பதவி விலகக் காரணமாக இருந்து ரயில்வே லஞ்சப் புகார் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகளை மத்திய குற்றத் தடய அறிவியல் ஆய்வகத்துக்கு சிபிஐ அனுப்பியுள்ளது.
இந்த லஞ்சப் புகார் தொடர்பாக சுமார் 2 மாதங்களுக்கு மேலாக 1000-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இந்த லஞ்சப் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பன்சாலின் மருமகன் விஜய் சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ் குமார், தரகர்கள் மஞ்சுநாத், சந்தீப் கோயல் ஆகியோரின் உரையாடல்கள் அடங்கியது என சிபிஐ வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த பதிவுகளில் உள்ள குரல்கள் யாருடையது என்பதை அறிந்து கொள்ளவும், இதில் தொடர்புடைய வேறு முக்கிய நபர்கள் குறித்த விவரங்களை அறியவும் தடய அறிவியல் ஆய்வு உதவியாக இருக்கும்.
ரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த மகேஷ் குமார், அதிக அளவில் டெண்டர்கள் விடும் அதிகாரம் உள்ள பதவியைப் பெற விஜய் சிங்லாவுக்கு ரூ.10 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளார். இதில் முதல் தவணையாக ரூ.90 லட்சம் கைமாறியபோது, சிபிஐ அவர்களைக் கைது செய்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

