சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்புள்ளாகும் பொருள்கள் பட்டியலில்டியலில் செல்போன்கள் சேர்க்கப்படாது என அதிகாரமளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழுத் தலைவரான சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.
அதிகாரமளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு பின் அவர் சனிக்கிழமை முசெüரியில் கூறியதாவது:
அறிவிக்கப்பட்டு பொருள்கள் பட்டியலில் செல்போன்கள், டேப்ளட் பிசிக்களை சேர்க்கக் கூடாது என சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு குழு முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் இக்கோரிக்கையை மாநில நிதி அமைச்சர்கள் குழு நிராகரித்து விட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காலத்தில் எந்த பொருள்களையும் அறிவிக்கப்பட்ட பொருள்கள் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை செம்மையாக செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
இதன் மூலம் முற்றிலும் வரி ஏய்ப்பை தடுக்க முடியும். மேலும் சர்க்கரை, ஜவுளி, புகையிலைப் பொருள்களுக்கு வரி விதிப்பது குறித்தும் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வாட்வரி விதிப்பில் நாட்டிலேயே பிகார் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடும், குஜராத்தும் உள்ளன. எனினும் வாட் வரியை 6 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.
சிறப்பு அந்தஸ்து பெற்ற ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்பாக ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் குழுவின் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

