தேசிய அளவில் குறைந்தபட்ட செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்டுள்ளன.
இதற்காக ஜூன்-ஜூலை மாதத்தில் பிற இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவிலான கூட்டமும் நடத்தப்பட இருக்கிறது. விரைவில் நடைபெறவுள்ள மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் இந்த மூன்றாவது அணி போட்டியிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் காங்கிரஸ், பாஜகவை ஏற்காத மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துதல் மசோதா, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவை குறைந்தபட்ச செயல் திட்டத்தில் முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு இறுதியில் 4 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல், இப்போதைய தெளிவற்ற அரசியல் சூழ்நிலை, முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
14-வது மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 44 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால் இப்போதைய மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பலம் 16 ஆக குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

