மிசோரம் மாநிலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவினால் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் அய்சாலின் லய்புய்ட்லங் பகுதியில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 9 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேரைக் காணவில்லை. இவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அய்சால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதால்
போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால், மின்சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அசாம்: அசாம் மாநிலம், குவாஹாட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெண் ஒருவர் காயமடைந்தார். பல வீடுகள் சேதமடைந்தன. குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

