சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பவன்குமார் பன்சால் கடந்த வாரமே பதவி விலகத் திட்டமிட்டிருந்தார்

முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், தன்னுடைய பதவியை கடந்த வாரமே ராஜிநாமா செய்யத் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On :12 மே 2013, 4:40 am

முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், தன்னுடைய பதவியை கடந்த வாரமே ராஜிநாமா செய்யத் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயில்வே துறை அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் நெருங்கிய உறவினர் விஜய் சிங்லா, ரயில்வே அதிகாரி மகேஷ்குமார் என்பவருக்கு பணி மாற்றம் பெற்றுத் தருவதற்காக ரூ.90 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பன்சாலுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தை முடக்கின. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தன்னுடைய அமைச்சர் பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார் பன்சால்.

இந்நிலையில் பன்சால் கடந்த வாரமே தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யும் எண்ணத்தில் இருந்ததாக தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தன்னுடைய உறவினர் விஜய் சிங்கலா கைது செய்யப்பட்டதற்கு அடுத்த நாளான மே 4-ஆம் தேதி மன்மோகன் சிங்கை சந்தித்தார் பன்சால்.

அப்போது ""என்னைப் பதவியிலிருந்து விடுவித்து விடுங்கள்; நான் இப்போதே ராஜிநாமா செய்கிறேன்'' எனக் குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடிதம் தந்துள்ளார்.

ஆனால் அப்போது ராஜிநாமா குறித்து அவரை பிரதமர் வற்புறுத்தவில்லை.

மேலும் அந்தக் கடிதத்தில், ""என்னுடைய உறவினர் கைது செய்யப்பட்டவுடன் இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன். ஆனால் ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் காரணமாகவே என் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது'' என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.