சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கினால் வரி

ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொடுத்து தங்க நாணயம், ஆபரணங்களை வாங்கும்போது ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

Updated On :2 மே 2013, 9:27 am

ரூ.2 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொடுத்து தங்க நாணயம், ஆபரணங்களை வாங்கும்போது ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய வரி ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதே போல ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக தங்கத்தை விற்பனை செய்யும்போது விற்பனையாளர் ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும்.

இப்போது வரை தங்க நாணயங்கள் என்பவை நகைகள் என்ற பிரிவிலும், மொத்த தங்க விற்பனை என்ற பிரிவிலும் வரவில்லை. எனவே அதற்கு வரி விதிக்கப்படாமல் இருந்தது.

இந்த வரிவிதிப்புக்கான நிதி மசோதா 2013 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற உள்ளது. அதன்பிறகு குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிப்பார்.

இது புதிய வரி அல்ல. 10 கிராம் மற்றும் அதற்கு குறைவான தங்க நாணயங்கள், நகைகள் விற்பனை வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுவரை அளிக்கப்பட்ட வரி விலக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.