சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாதந்தோறும் 65,140 கி.லி. மண்ணெண்ணெய் வேண்டும்: தமிழக அரசு

தமிழகத்துக்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மனு தாக்கல் செய்தது.

Updated On :2 மே 2013, 12:45 pm

தமிழகத்துக்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதன்கிழமை மனு தாக்கல் செய்தது.

அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் ஒரு கோடியே 52 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதற்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 52,806 கிலோ லிட்டர் ஆக இருந்த ஒதுக்கீடு கடந்த ஏப்ரல் மாதத்தில் 26,060 கிலோ லிட்டர் ஆகக் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், 98 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்கள் மீது புகார்: போலியான முகவரி, ஒரே முகவரியில் பல சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருந்தது ஆகிய காரணங்களுக்காக தமிழகத்தில் சுமார் 13 லட்சம் இணைப்புகளை சமையல் எரிவாயு நிறுவனங்கள் துண்டித்துள்ளன. அவர்களின் விவரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அந்த விவரங்களை அளித்திருந்தால் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட முகவரியில் உள்ள குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

பாரபட்சம்: குறைந்த மக்கள்தொகை கொண்ட பிற மாநிலங்களுக்கு அதிக அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதிக குடும்ப அட்டைகள் கொண்ட தமிழகத்துக்கு குறைந்த அளவில் மண்ணெண்ணெய் ஒதுக்கப்படுகிறது.

மேலும் குறையுமா?: தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சுமார் 55 சத மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. அத்தியாவசியப் பொருள்களை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆகையால், தமிழகத்துக்கு மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.