சீன ஊடுருவல் பிரச்னையில் மத்திய அரசு மிகவும் பலவீனமான கொள்கைகளை பின்பற்றுவதாக வி.எச்.பி. புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில வி.எச்.பி. தலைவர் டாக்டர் ரமாகாந்த் துபே புதன்கிழமை கூறியதாவது:
லடாக்கில் சீனா ஊடுருவியதை உள்ளூர் பிரச்னை என பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார். அதே போல் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அப்பகுதியில் மனிதர்கள் எவரும் வாழ்வதில்லை எனக் கூறி உள்ளார்.
இதுபோன்ற அறிக்கைகளால் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் சீன ஊடுருவல் பிரச்னை தொடருவதற்கு பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலவி விடலாம்.
தற்போதைய மத்திய அரசு ஊழல் நிறைந்ததாக உள்ளது. பாலியல் பலாத்காரம், நிதி நிறுவன மோசடிகள் என நாட்டை பாதிக்கும் பிரச்னைகளை கவனிக்க அரசுக்கு நேரமில்லை.
சீன ஊடுருவலை முடிவுக்கு கொண்டு வர பொருளாதார, தூதரக, ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் துபே.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

