இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டபோதும், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு டன்னுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ. 1000 குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியத்தை குறைத்து மத்திய அமைச்சரவை முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
இந்த நிதியாண்டுக்கான மானியக் குறைப்பு என்பது 15 சதவீதம்தான். உரங்களின் பயன்பாட்டைப் பொறுத்தே அதற்கு அளித்து வரும் மானியத்தின் அளவு அமையும்' என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

