சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜேபிசி வரைவு அறிக்கை: 15 உறுப்பினர்கள் நிராகரிப்பு

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அளித்த வரைவு அறிக்கையை அக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

Updated On :2 மே 2013, 4:33 am

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அளித்த வரைவு அறிக்கையை அக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

முன்னதாக பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, திமுக, பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் கடந்த வாரம் மக்களவைத் தலைவர் மீரா குமாரை சந்தித்தனர். அப்போது ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அக்கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் ஜேபிசி செயலகத்துக்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ளனர். அதில் 2ஜி அலைக்கற்றை தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்தி அளித்த வரைவு அறிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஜேபிசி மொத்தம் 30 உறுப்பினர்களைக் கொண்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஜேபிசி வரைவு அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது எந்த தவறும் இல்லை என்றும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா மீதுதான் தவறு என்றும் கூறப்பட்டிருந்தது.