பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்காமல் கூடங்குளம் அணு உலையைத் தொடங்குவதில் மத்திய அரசு அவசரப்படக் கூடாது என்று கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் எச்சரித்துள்ளார்.
இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையம் இந்த மாத இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக அதன் தொடக்கம் தாமதப்பட்டது. இந்த அணு உலையில் பழுதடைந்த 4 வால்வுகளை மாற்றியுள்ளதாக இந்திய அணு சக்திக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூடங்குளம் அணு உலையின் சில பகுதிகளில் கோளாறுகள் ஏற்பட்டிருப்பதாக அணு சக்தி ஒழுங்குமுறை அமைப்பின் (ஏ.இ.ஆர்.பி.) முன்னாள் தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் போன்ற நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நிபுணர்களின் இந்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி, உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளை மீறி இந்த அணு உலையை திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் தொடங்குவது என்று மத்திய அரசு செயல்படுவது தவறாகும். இதை இம்மாத இறுதியில் தொடங்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுதானந்தன் சில மாதங்களுக்கு முன் தான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதற்காக அவரை மார்க்சிஸ்ட் மேலிடம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

