மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனியார் மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் கே.டாண்டன் கூறியதாவது: மம்தா பானர்ஜி தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன், ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது. டாக்டர் சுப்ரதா மொய்த்ரா தலைமையிலான 10 மருத்துவர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது என்றார்.
புது தில்லியில் திட்டக்குழு துணைத் தலைவரை சந்திக்கச் சென்ற போது மம்தா பானர்ஜி, நிதி அமைச்சர் அமித் மித்ரா ஆகியோர் இடதுசாரி மாணவர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டனர்.
இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்ட மம்தாவுக்கு ஆக்ஸிஜனும் வழங்கப்பட்டது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மம்தா பானர்ஜிக்கு சோதனை நடைபெற்றது. மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி பரிந்துரைக்கப்பட்டதால் அவர்
கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவரை நலன் விசாரித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி கூறியதாவது: மம்தா பானர்ஜி நலமாக உள்ளார். எனினும் மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் உள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

