தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர் தாக்கியதில் இறந்த 5 இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லிக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
ஐ.நா. அமைதிப்படையின் ஒரு பகுதியாக தெற்கு சூடானில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜோங்லி பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் லெப்டினன்ட் கர்னல் மகிபால் சிங், வீரர்கள் சிவ்குமார் பால், ஹீராலால், பரத் சிங், நந்த் கிஷோர் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே ஐ.நா. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களின் சடலங்கள் புது தில்லி கொண்டு வரப்பட்டன.
ராணுவ மரியாதையோடு அவர்களின் சடலங்களுக்கு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வீரர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

