சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழ்த்தாய் விருது: தமிழக முதல்வருக்கு நன்றி

தமிழக அரசின் 2013-ம் ஆண்டுக்கான "தமிழ்த்தாய் விருது'க்கு தில்லித் தமிழ்ச் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சங்க பொதுச் செயலர் இரா. முகுந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஏப்ரல் 2013, 7:25 am

தமிழக அரசின் 2013-ம் ஆண்டுக்கான "தமிழ்த்தாய் விருது'க்கு தில்லித் தமிழ்ச் சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சங்க பொதுச் செயலர் இரா. முகுந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையொட்டி, முகுந்தன் வியாழக்கிழமை கூறியதாவது:

தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு மிக உயரிய விருதான "தமிழ்த்தாய் விருது' வழங்கி, மேலும் பல ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட எங்களுக்கு ஊக்கமளித்துள்ள தமிழக முதல்வருக்கு தில்லிவாழ் தமிழர்கள் சார்பிலும், தில்லித் தமிழ்ச் சங்கம் சார்பிலும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு போன்ற துறை சார்ந்த வளர்ச்சிக்கு எந்த அரசும் செய்திடாத வகையில் பல அரிய பணிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செய்து வருகிறது. இதை உலக நாடுகளில் உள்ள அனைத்துத் தமிழ் அமைப்புகளும் பாராட்டி மகிழ்கின்றன.

இந்த மகிழ்வான தருணத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னோடிகள் எஸ். சுப்பிரமணியம், பி.வி. நரசிம்மன், ஜே. வீரராகவன், எஸ். ராமையா, எஸ். ராமாமிர்தம், வி. ராஜாராமன், ஜி. பாலச்சந்திரன், தமிழ்ச்சங்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி, புலவர் விஸ்வநாதன், எம்.என்.எஸ். மணியன், பி.ஆர். வேங்கடகிரி, சாலை இளந்திரையன், முதல் செயலர் அ.வி. குப்புசாமி ஆகியோரை நினைவுகூர்கிறோம்'' என்றார் இரா. முகுந்தன்.

வாழ்த்து: தமிழ்நாடு அரசின் "தமிழ்த் தாய் விருது'க்கு தில்லித் தமிழ்ச் சங்கம் தேர்வு செய்யப்பட்டிருப்பதையடுத்து அதன் பொதுச் செயலர் இரா. முகுந்தனை தில்லி முத்தமிழ்ப் பேரவைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.