பிகாரில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையை வாபஸ் பெற்றதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து பிகார் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ. பவண் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை பேசியதாவது:
என்னுடைய கிழக்கு சாம்பரன் மாவட்டத்திலும் பிகாரின் இன்னொரு பகுதியிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த மத்திய போலீஸ் பாதுகாப்புப் படைப் பிரிவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் இந்தச் செயல் மாநில அரசுக்குத் தெரியுமா? அப்படி மாநில அரசுக்குத் தெரியாமல் பாதுகாப்புப் படைப் பிரிவை வாபஸ் பெற்றிருந்தால் மத்திய அரசை எதிர்த்து மாநில அரசு போராடுமா என தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பினார்.
அவரைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்களும் காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்களும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு கோஷமிட்டனர்.
சட்டப்பேரவைத் தலைவர் உதய் நாராயண் செüத்ரியின் பதில் திருப்தியளிக்காததால் எதிர்க்கட்சியினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் உள்துறை அமைச்சகத்துக்கு கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் நீர் வளத்துறை அமைச்சர் விஜய்குமார் செüத்ரி கூறியதாவது:
மத்திய போலீஸ் பாதுகாப்புப் படைப் பிரிவை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு மாநில அரசுடன் ஆலோசிக்கவில்லை; அது குறித்து எந்தத் தகவலும் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் செயல் பாரபட்சமானது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

