ஆந்திரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி தலைமையில் தொடர்ந்து 3ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மின்கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், தெலுங்கு தேசம் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சுழற்சி அடிப்படையில் பழைய எம்எல்ஏ விடுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களது உண்ணாவிரதம் முடிந்த பின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஏ.லட்சுமிநாராயணா உள்ளிட்டோர் உண்ணாவிரதம் தொடங்கினர். இந்த உண்ணாவிதம் தொடர்ந்து 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தது.
மாநிலத் தலைவர் கிஷன் ரெட்டி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். 3ஆவது நாளன்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, வித்யாசாகர், ஆந்திர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணய்யா, ஜெயப்பிரகாஷ் நாராயணா எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

