இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டது எனக் கூறி ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஜம்மு மாநில மோர்ச்சா (ஜேஎஸ்எம்) எம்.எல்.ஏ. அஸ்வினி சர்மா பேசியதாவது:
போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் ஜம்மு காஷ்மீர் எல்லையோரத்தில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தானின் குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு யாருக்கும் நிவாரணத்தொகை வழங்கவில்லை என்றார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் சஜத் அகமது பதிலில் திருப்தியடையாத பாஜக, ஜேஎஸ்எம், ஜேகேஎன்பிபி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். அதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

