ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக் சவாணின் மனுவுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பு வளாக ஊழல் தொடர்பாக, தம் மீது சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என சவாண் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கிள்கிழமை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
அசோக் சவாண் முதல்வராக இருந்தபோது, ஆதர்ஷ் சங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். இதற்குப் பிரதிபலனாக, சவாண் உறவினர்களுக்கு ஆதரஷ் குடியிருப்பு வளாகத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
வழக்கின் அடுத்த விசாரணையை 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

