2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியதற்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுநீல் பார்தி மிட்டல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
2002-ஆம் ஆண்டு கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் மீதான விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க சுநீல் மிட்டல், எஸ்ஸôர் குழும நிறுவனர் ரவி ரூயா, ஹட்சிஸன் மாக்ஸ் நிறுவனத்தின் அன்றைய நிர்வாக இயக்குநர் அசீம் கோஷ் ஆகியோர் ஏப்ரல் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுநீல் மிட்டல் திங்கள்கிழமை முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரத்தில் மிட்டல் பெயர் இடம்பெறவில்லை.
இந்த வழக்கில் தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த எவர் பெயரும் இடம்பெறவில்லை.
முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் இவர்கள் மூவரும் தங்கள் நிறுவனங்களில் முக்கிய முடிவெடுக்கும் நிலையில் இருந்தனர். அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்களை விசாரிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

