சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேகாலயத்தில் பழங்குடி இனத்தைச் சேராதவர் பேரவைத் தலைவராக தேர்வு

மேகாலய சட்டப் பேரவையில் முதன் முதலில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக

Updated On :12 மார்ச் 2013, 8:57 am

மேகாலய சட்டப் பேரவையில் முதன் முதலில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. புல்பாரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் மண்டல், மலையக மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஆர்டெண்ட் பசையாமொய்ட் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

ஆர்டெண்டின் விண்ணப்பத்தை வழிமொழிய யாரும் முன்வரவில்லை என்பதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவைத் தலைவராக மண்டல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் முகுல் சங்மா, முன்னாள் முதல்வர்கள் டி.டி. லபாங், எஸ்.சி. மராக் மற்றும் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.