மேகாலய சட்டப் பேரவையில் முதன் முதலில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. புல்பாரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் மண்டல், மலையக மாநில மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஆர்டெண்ட் பசையாமொய்ட் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
ஆர்டெண்டின் விண்ணப்பத்தை வழிமொழிய யாரும் முன்வரவில்லை என்பதால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவைத் தலைவராக மண்டல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேகாலய சட்டப்பேரவை வரலாற்றில் பழங்குடி இனத்தைச் சேராத ஒருவர் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும். அவருக்கு முதல்வர் முகுல் சங்மா, முன்னாள் முதல்வர்கள் டி.டி. லபாங், எஸ்.சி. மராக் மற்றும் அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
11 அமைச்சர்கள்: மேகாலய சட்டப்பேரவையில் ரோவல் லிங்டோ, ராய்ட்ரே சி லாலு, ஹெச்.டி.ஆர்.லிங்டோ, பி.டிங்சாங், ஏ.லேக், ஜெனித் சங்மா, கிளமெண்ட் மராக், ஸ்னியாபலாங் தர் மற்றும் மூன்று பெண்கள், அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்க உள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

