ஜெர்மன் நாட்டுப் பெண்ணைப் பலாத்காரம் செய்த குற்றவாளி பிட்டி மொஹந்தியை 10 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒடிசா மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி பி.பி.மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி, ராஜஸ்தானில் ஜெர்மனி நாட்டுப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். ராஜஸ்தான் சிறையில் இருந்த அவர் 7 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வெளியே வந்தார். மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாகி விட்டார். அவர் அதன் பின் கேரள மாநிலம் சென்று, ராகவ் ராஜன் என்ற போலியான பெயரில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், ஆவணங்களை மோசடி செய்து, வங்கி அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு பொதுத்துறை வங்கி ஒன்றில் அதிகாரி பணிவாய்ப்பு கிடைத்தது. பழையங்காடி பகுதியில் உள்ள வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் தில்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு பாலியல் குற்றவாளிகளின் படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்தப் படங்கள், இணையதளங்களிலும் வெளியிடப்பட்டன. அவற்றில் பிட்டியின் படமும் இருந்தது. இதைக் கண்ட அவரது சக வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் அளித்தனர். போலீஸôர், பிட்டியைக் கைது செய்தனர். அவரை பையனூர் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். பிட்டியிடம் மேல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 10 நாள் காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸôர் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்.ஸ்மிதா, பிட்டியை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
எனவே, பிட்டியை முதலில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் சென்று அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போலீஸôர் திட்டமிட்டுள்ளனர். இந்த விஷயத்தில் ராஜஸ்தான் போலீஸின் உதவியையும் நாடியுள்ளனர். அதன் பிறகு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீஸôர் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

