""உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தில்லி திஹார் சிறைக்குத் திரும்பிச் செல்ல தயக்கமாக உள்ளது; அதனால் எங்களை வேறு சிறையில் அடையுங்கள்'' என்று தில்லி மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோத் கன்னாவிடம் திங்கள்கிழமை முறையிட்டனர்.
தில்லி மாணவி பாலியல் வழக்கு விசாரணை சாகேத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங், வினய் சர்மா ஆகிய நான்கு பேரும் திங்கள்கிழமை காலையில் பலத்த பாதுகாப்புடன் சாகேத் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோத் கன்னா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.கே. ஆனந்த், ""திஹார் சிறையில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ராம் சிங் மரணம் அடைந்து விட்டார். அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதனால், சிறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. அதனால், இவர்களை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
"இது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று நீதிபதி கூறியதையடுத்து அவரிடம் பேசிய முகேஷ் சிங் உள்ளிட்ட நால்வர், ""எங்களை மீண்டும் திஹார் சிறைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டாம். வேறு எந்தச் சிறைக்கும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

