இந்தியா-சீனா இடையே போர் மூளுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சிவசங்கர் மேனனிடம் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: இந்தியா, சீனா இடையே போர் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. அந்த நாட்டுடனான பிரச்னைகளை கையாளத் தேவையான 8000 ஆண்டுகால ராஜதந்திரம் நம்மிடம் உள்ளது என்று கருதுகிறேன். கடலோரப் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையை, இருநாடுகளும் கடந்தாண்டு தொடங்கியுள்ளன. இதனால், சீன கப்பல் படையின் பலம் பற்றி நாம் கவலைகொள்ள தேவையில்லை.
சூயஸ் கால்வாய் முதல் மேற்கு பசிபிக் கடல் வரையிலான கடல் வழியை எப்போதும் திறந்து வைத்திருக்கவும், அதன் வழியே தடையற்ற வர்த்தகம் நடைபெறவும் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஆர்வம் கொண்டுள்ளன. அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. அரசிடம் இருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். வானிலையை கூட அரசு தான் நிர்ணயிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். மக்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பை அரசுகளால் முழுமையாக பூர்த்திசெய்ய இயலாத சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

