பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ""நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த மறுநாளே, பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இது மக்களுக்குச் செய்யும் துரோகம். இந்த விவகாரத்தை பா.ஜ.க. சும்மா விடாது. இந்தப் பிரச்னை, நாடாளுமன்றத்தின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரிய அளவில் எழுப்பப்படும். நாட்டு மக்கள் ஏற்கெனவே விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு அவர்களை மேலும் பாதிக்கும். மத்திய அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பும் பெட்ரோல் விலையை உயர்த்தியது. அதன் பிறகும் அதைச் செய்துள்ளது'' என்றார்.
பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ""மக்களை அரசு ஏமாற்றிவிட்டது. இந்த விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

