சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கருணை மனுக்கள் மீது 3 மாத காலத்துக்குள் நடவடிக்கை: நாடாளுமன்றக் குழு பரிந்துரை

தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது 3 மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

Updated On :2 மார்ச் 2013, 9:34 am

தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது 3 மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளின் கருணை மனுக்களை பரிசீலிக்கக் கூடாது. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை குடியரசுத் தலைவர் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 72, தூக்கு தண்டனைக் கைதியின் தண்டனையைக் குறைக்க அல்லது ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர், இறந்தாலோ அல்லது சுய நினைவற்ற நிலையை எட்டினாலோ, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டுக்கு பரிந்துரையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றங்களில் ஈடுபடும் சிறார்களின் வயதைக் குறைக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அது தொடர்பாக பரிந்துரையில் எதுவும் கூறப்படவில்லை.