சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பேசும் சிகரெட்டுகளை தயாரித்துள்ள விஞ்ஞானிகள்

சிகரெட் பெட்டியில் இருந்து சிகரெட்டை எடுத்ததும், அதில் இருந்து பதிவு செய்யப்பட்ட குரல் கேட்பது போல பேசும் சிகரெட்டுகளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

Updated On :1 ஜூலை 2013, 9:16 pm

சிகரெட் பெட்டியில் இருந்து சிகரெட்டை எடுத்ததும், அதில் இருந்து பதிவு செய்யப்பட்ட குரல் கேட்பது போல பேசும் சிகரெட்டுகளை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.

புகையிலை ஒழிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டர்லிங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற இரண்டு வகையான சிகரெட்டுகளை தயாரித்துள்ளனர்.

அதாவது, ஒன்று சிகரெட்டை எடுத்ததும், புகையிலை பழக்கத்தை விடுவதற்கான வழிகளை அறிந்து கொள்ள ஒரு தொலைபேசி எண்ணை கூறும் வகையிலும், மற்றொரு வகை சிகரெட்டில், சிகரெட் பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் பற்றி கூறும் வகையிலும் அமைந்திருக்கும்.

வாழ்த்து அட்டையை திறக்கும் போது அதில் இருந்து எவ்வாறு பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறதோ அதுபோன்றுதான் இதுவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெட்டியைத் திறந்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு சிகரெட்டையும் எடுக்கும் போதும் இந்த குரல் ஒலிக்கும். இதன் மூலம் சிகரெட் பழக்கத்தை விடுவதற்கான வழி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.