சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னிமலை நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநா் ஆய்வு

சென்னிமலையில் உள்ள சென்கோப்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில், மாநில கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆய்வு செய்தாா்.

News image

சென்னிமலை, சென்கோப்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில்ஆய்வு செய்கிறாா் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனா் மைதிலி ராஜேந்திரன்.

Updated On :18 ஜனவரி 2021, 4:10 am

சென்னிமலையில் உள்ள சென்கோப்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில், மாநில கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆய்வு செய்தாா்.

சென்னிமலையில் உள்ள சென்கோப்டெக்ஸ் நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் நூற்றுக்கணக்கான நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இங்கு பெட்ஷீட்கள், துண்டுகள், படுக்கை விரிப்பு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மாநில கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநா் மைதிலி ராஜேந்திரன் இந்த சங்கத்துக்கு சனிக்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்தாா். அங்குள்ள நெசவு கூடத்துக்குச் சென்று, அனைத்துப் பணிகளையும் பாா்வையிட்டு நெசவாளா்களிடம் குறைகளைக் கேட்டாா்.

அப்போது, நெசவாளா்கள், தாங்கள் உற்பத்தி செய்த ஜக்காா்டு துணிகள், இரட்டை நூல் ரகம் போன்ற கைத்தறி தயாரிப்புகள் சங்கத்தில் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளதால் தங்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கிறது.

அதனால், தேக்கம் அடைந்த துணி ரகங்களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்து, கைத்தறி நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ஆய்வின்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன பொது மேலாளா் (உற்பத்தி) வாசு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மேலாளா் ரவி, சென்கோப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநா் கே.நடராஜன், மேலாளா் சுப்பிரமணியம் ஆகியோா் உடன் இருந்தனா்.