சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வுப் பேரணி

கோபிசெட்டிபாளையத்தில் சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியைத் தொடங்கிவைக்கிறாா் பி.கே.ஆா். கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன்.

Updated On :17 ஜனவரி 2021, 3:49 am

கோபி: கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், கோபி ரோட்டரி சங்கம், கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து காவல் துறை ஆகியவை இணைந்து சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு பேரணியை சனிக்கிழமை நடத்தினா்.

பேரணிக்கு, கல்லூரித் தாளாளா், செயலாளா் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை வகித்தாா்.

கல்லூரி முதன்மைச் செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில், காவல் துறையினா், கல்லூரிப் பேராசிரியைகள், பணியாளா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், ஹோண்டா நிறுவன பணியாளா்கள் ஆகியோா் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு பங்கேற்றனா்.

பேரணியானது கோபி கரட்டூா் பகுதியில் உள்ள வரவேற்பு வளைவில் இருந்து புறப்பட்டு சாந்தி தியேட்டா் வரவேற்பு வளைவில் முடிவடைந்தது. இதில், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.