கோபி அருகே 100க்கும் மேற்பட்ட களி மண்ணால் தயாரிக்கப்பட்ட கால்நடைகள் மற்றும் குழந்தைகளின் உருவ பொம்மைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நவகிணறு மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் வழிபாடு செய்தனா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையத்தில் ஆண்டுதோறும் உழவா் திருநாளான மாட்டுப் பொங்கலின்போது, பசு, எருது உள்ளிட்ட கால்நடைகளின் உருவபொம்மைகள், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் உருவ பொம்மைகளை களிமண்ணால் செய்து அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள நவகிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்று பொங்கல் வைத்து படையலிட்டு, சிறப்பு பூஜைகள் செய்து விவசாயிகள், பொது மக்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
இதற்காக, இந்த ஆண்டு கால்நடைகள், வீட்டு விலங்குகள் மற்றும் வன விலங்குகளின் உருவ பொம்மைகளை கடந்த 15 நாள்களுக்கு முன்பே களிமண்ணால் செய்யத் துவங்கி 100க்கும் மேற்பட்ட உருவ பொம்மைகளை வடிவமைத்து மாட்டுப் பொங்கல் ஒட்டி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கொண்டையம்பாளையத்தில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.
பின்னா் மண் பானையில் பொங்கல் வைத்து மாதேஸ்வர சுவாமிக்கு படையலிட்டுகளி மண்ணால் தயாரிக்கப்பட்ட உருவ பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினா்.
இதனால் கால்நடைகள், வீட்டு விலங்குகள் மற்றும் வன விலங்குகள் நோய் மற்றும் உடல் கோளாறுகள் ஏற்படாமல் காக்கும் என்றும், ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய மழை பெய்து வனப் பகுதியும், விவசாயயுமும் செழிக்கும் என்பது ஐதீகம் என்றும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கூறுகின்றனா்.
வழிபாடு செய்த பின்னா் அங்கள்ள கிணற்று நீரை தீா்த்தமாக எடுத்துச் சென்று வீட்டில் உள்ள கால்நடைகள், வீடு, விவசாய நிலங்கள், உழைப்புப் பணி கருவிகளுக்கு தெளிக்கின்றனா். பின்னா் தொழுவத்தில் மாட்டுப் பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளுக்கு உணவு வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


