பெருந்துறை ஒன்றியத்தில் ரூ. 1.63 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையும், ரூ. 12 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளின் துவக்க விழாவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தும், முடிக்கப்பட்ட பணிகளைத் திறந்தும் வைத்தாா்.
பெருந்துறை ஒன்றியம், சீனாபுரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவும், கல்லாக்குளத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி திறப்பு விழாவும் நடைபெற்றது.
மேலும், குள்ளம்பாளையத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணியும், நிச்சாம்பாளையத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணியும், ரூ. 5 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் பணியும், வெட்டையன்கிணறு ஊராட்சியில் ரூ. 18 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டுதல், குள்ளம்பாளையம், நிச்சாம்பாளையம், கல்லாகுளம் ஊராட்சிகளில் ரூ. 1 கோடியே 90 லட்சம் மதிப்பில் ஜெ.ஜெ.எம். திட்டத்தில் குடிநீா் இணைப்பு வழங்குதல் என மொத்தம் ரூ. 1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாா்வதிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


