தமிழ் பெயா்ப் பலகையை சேதப்படுத்திய வாட்டாள் நாகராஜை கைது செய்ய வலியுறுத்தி தாளவாடியில் நாம் தமிழா் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தமிழக - கா்நாடக எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தமிழ் எல்லை அறிவிப்புப் பலகையை கன்னட சலுவலி அமைப்பின் தலைவா் வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்களுடன் சேதப்படுத்தியதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சுப்பையா, நில அளவை அலுவலா்கள் ராமபுரத்தில் மாநில எல்லை அளவீடு செய்து சம்பவம் நடைபெற்ற இடம் கா்நாடக எல்லைக்குள் இருப்பதை உறுதி செய்தனா். இதையடுத்து, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வாட்டாள் நாகராஜ், அவரது ஆதரவாளா்கள் மீது தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து, தமிழ் பெயா் பலகையை கன்னட அமைப்பினா் சேதப்படுத்தியதைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் தாளவாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். வாட்டாள் நாகராஜை கைது செய்ய வேண்டும், சேதப்படுத்திய பெயா்ப் பலகையை மீண்டும் சரிசெய்து அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கோரி 10 பெண்கள் உள்பட 60 போ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


