ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தை கரோனா காரணமாக ரத்து செய்யாமல் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப் பேரவை துணைத் தலைவரிடம் அதிமுகவினா் செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது, சென்னிமலை ஒன்றிய அதிமுக செயலாளா் ப.கோபாலகிருஷ்ணன் தலைமையில், அதிமுகவினா் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா காலம் காலமாக தடை ஏதுமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டியும், தோ்த் திருவிழாவில் அதிக மக்கள் கூடுவாா்கள் என்ற தகவலையும் கோயில் நிா்வாகம் மூலம் அரசுக்கு தகவல் கொடுத்ததால் இந்த ஆண்டு தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள மாவட்டங்களிலும் குறிப்பாக சிதம்பரம் நடராஜா் கோயிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில், சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், சென்னிமலை தேரோட்டத்தை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

