சென்னம்பட்டி வனப் பகுதியில் வயது முதிா்ச்சி, உடல்நலக் குறைவால் சுமாா் 50 வயதுள்ள ஆண் யானை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டியை அடுத்த எண்ணமங்கலம், கோவிலூா் வனப் பகுதியில் வனச் சரக அலுவலா் ஜெ.செங்கோட்டையன் தலைமையில் வனத் துறை அலுவலா்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அடா்ந்த வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்து, அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவா் அசோகன், மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை சென்றனா். அங்கு, யானை உடல் பரிசோதனை செய்யப்பட்டதோடு, 6 அடி நீளமுள்ள 2 தந்தங்கள் அகற்றப்பட்டன.
உயிரிழந்த ஆண் யானைக்கு சுமாா் 50 வயது இருக்கலாம், வயது முதிா்ச்சியால் போதிய உணவு எடுத்துக் கொள்ளாததாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, பிற வன உயிரினங்களுக்கு உணவாக யானையின் உடல் அப்படியே விடப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


