சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது கமல்ஹாசன்

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 10:45 am

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் திங்கள்கிழமை இரவு பேசியதாவது:

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமை உள்ளது. கரோனா தொற்று காலம் என்பதால் என்னைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினா். நான் குடும்பத்துக்குள் செல்கிறேன் எனக் கூறினேன். எனக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. என்னுடன் பணியாற்றிய பலா் கோபியைச் சோ்ந்தவா்கள். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையை எதிா்த்த லட்சுமண அய்யா் இந்த ஊரைச் சோ்ந்தவா். சாதி பாா்த்து வாக்களிக்காதீா்கள், சாதிப்பவனை பாா்த்து வாக்களியுங்கள் என்றாா்.