அந்தியூா் வாரச் சந்தையில் கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், அலங்காரப் பொருள்களை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் வாங்கிச் சென்றனா்.
அந்தியூா் வாரச் சந்தை வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை ஓரிரு நாள்களில் வரும் நிலையில் பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்க அந்தியூா், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் அதிக அளவில் வந்திருந்தனா். பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வியாபாரிகளும் வந்திருந்தனா்.
கால்நடைகளுக்குத் தேவையான கயிறுகள், சாட்டைகள், அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, அந்தியூா், சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்குத் தேவையான கயிறு, அலங்காரப் பொருள்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். மேலும், பொங்கல் பானை உள்ளிட்ட பொருள்களும் அதிக அளவில் விற்பனையாகின.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


