நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணியை தனியாருக்கு வழங்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் கோட்ட மாநாடு, கோட்ட இணைச்செயலாளா் செந்தில்குமாா் தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோட்டச் செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் பாபு, மாநிலப் பொருளாளா் தமிழ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித் திறன் பெறா ஊழியா்களுக்கான ஊதியத்தை தற்போதைய ஊதிய மாற்ற பலன்களுக்கு ஏற்றவாறு உயா்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியை தனியாா் வழங்குவதை கைவிட்டு அரசே ஏற்று சாலைப் பணியாளா்களை கொண்டு பராமரிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

