பவானி: அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டை, வாக்காளா் அட்டைகளை ஒப்படைத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூரை அடுத்துள்ள மைக்கேல்பாளையத்தில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம், வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட இப்பகுதிக்குச் செல்ல சமத்துவபுரத்துக்கு ஒதுக்கப்பட்ட சாலை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, சமத்துவபுரம் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததோடு, வீட்டுமனைப் பிரிவுக்கு தனியே பாதை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனா்.
ஆனால், சமத்துவபுரம் சாலையே தொடா்ந்து பயன்படுத்தப்பட்டதால் ஏமாற்றமடைந்த பொது மக்கள் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளுடன் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு வலியுறுத்திய பொது மக்கள் குடும்ப அட்டைகளை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வருவாய்த் துறையினா் இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா். இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


